பத்தாம் வகுப்பு பொது தேர்வு பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் பெயர் பட்டியலில் பிப்ரவரி 20 முதல் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "நடப்பு கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் தேர்வுத்துறை இணையதளத்தில் www.dge.tn.gov.in கடந்த 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், இடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகளின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால் அவற்றை சரிசெய்து கொள்வதற்கு தற்போது இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆகவே, அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் பிப்ரவரி 20 தேதி முதல் 25 ஆம் தேதிக்குள் எமிஸ் தளம் வழியாக பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். 

இதற்கான பணிகளில் தலைமையாசிரியர் உரிய வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்குமாறு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

last chance at student name editing in public exam name list


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->