திமுகவையே குறிவைக்கும் விஜய் – மு.க.ஸ்டாலினை நேருக்கு நேர் சந்திக்கும் விஜய்..! தவெகவின் அதிரடி வியூகம்..!
Vijay targets DMK Vijay will meet MK Stalin face to face Thaveka action strategy
அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்து அங்கிருந்து வாக்குகளைப் பெறுவது எளிது. ஆனால் திமுகவின் வாக்குகளை உடைப்பது தான் சிரமமான காரியம். அதில்தான் தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் கவனம் மையமாகி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக தற்போது எப்படிப்பட்டோரின் கைகளில் சிக்கி இருக்கிறது என்று கூறியிருந்தார். இது, அதிமுகவின் இடத்தைப் பிடிக்க வேண்டிய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நடுநிலை அரசியல் ஆர்வலர்கள், “தவெகவுக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிமுகவையும் பின்னுக்குத் தள்ளக்கூடிய நிலைக்கு விஜய் சென்று கொண்டிருக்கிறார். இதே நிலையை பல சர்வேகளும் பிரதிபலிக்கின்றன” என்று கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழகத்திலும், இந்திய அளவிலும் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளில், “புதியதாக உருவான கட்சிக்கு இந்த அளவு ஆதரவு வருவது ஆச்சரியமானது” என்றே பல ஏஜென்சிகள் கூறியுள்ளன. இதுவே மக்கள் தவெகவை தீவிரமாக கவனிக்கத் தொடங்கியிருப்பதற்கான சான்று என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
விஜய்க்கு இவ்வளவு தாக்கம் கிடைத்ததற்கான முக்கியக் காரணம், தற்போது தமிழ்நாட்டில் திமுகக்கு நேரடி எதிர்ப்பு தெரிவிக்கும் வலுவான ஒரு மாற்றுக் கட்சி இல்லாத நிலை. அந்த இடத்தை நிரப்பவே விஜய் முன்வந்துள்ளார். இதனால் தான் அவருக்கு வலுவான நம்பிக்கை உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.
மதுரை மாநாட்டில் விஜய் வெளிப்படையாகவே திமுகவையே குறிவைத்து பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக மட்டுமல்லாது அதிமுக, பாஜக, மற்ற கட்சிகளும் அவரைத் தாக்கி வருகின்றன. இதன் விளைவாக அரசியல் விவாதங்கள் அனைத்தும் தற்போது விஜயைச் சுற்றியே நடைபெற்று வருகின்றன.
இதுவரை நேரடியாக விஜய்க்கு பதில் கூறாத திமுக அமைச்சர்கள் கூட இப்போது அவரைத் தாக்கி கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். இதையே, “விஜய்க்கு கிடைத்த மிகப் பெரிய அரசியல் வெற்றி” என அரசியல் வட்டாரங்கள் மதிக்கின்றன.
English Summary
Vijay targets DMK Vijay will meet MK Stalin face to face Thaveka action strategy