சும்மாவே இருக்கறதுக்கு எதுக்கு உங்களுக்கு கட்சி?..காரணத்தை சொல்லுங்க! தமிழகத்தின் 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இதேசமயம், கடந்த 6 ஆண்டுகளாக எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத ஆறு கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 29-கின் கீழ் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் சலுகைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அவை:

வருமான வரி விலக்கு (பிரிவு 13-கி, வருமான வரி சட்டம்),அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கான சின்ன ஒதுக்கீடு,பொது தேர்தல் சின்ன ஒதுக்கீட்டில் முன்னுரிமை,நட்சத்திர பிரசார நியமனம் உள்ளிட்ட பல சலுகைகள்.

ஆனால், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தேர்தல்களில் வேட்பாளர்களை நியமிக்க வேண்டும் என்பது சட்டத்தின் அடிப்படை நிபந்தனை எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள கட்சிகள்

சென்னை தலைமை தேர்தல் அலுவலர் வரம்பில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகள்:

  1. கோகுல மக்கள் கட்சி – தேனாம்பேட்டை, சென்னை.

  2. இந்தியன் லவ்வர்ஸ் பார்டி – கோடம்பாக்கம், சென்னை.

  3. இந்தியன் மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் – தி.நகர், சென்னை.

  4. மக்கள் தேசிய கட்சி – நுங்கம்பாக்கம், சென்னை.

  5. மனிதநேய மக்கள் கட்சி – வட மரக்காயர் தெரு, சென்னை.

  6. பெருந்தலைவர் மக்கள் கட்சி – அசோக் நகர், சென்னை.

இந்த ஆறு கட்சிகளும் 2019-ஆம் ஆண்டு முதல் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடாததால், “ஏன் கட்சியின் பதிவை ரத்து செய்யக்கூடாது?” என்ற காரணக் குறிப்பு நோட்டீஸை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், தலைமை தேர்தல் அலுவலரிடம் நேரில் ஆஜராகி அல்லது எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும்படி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கட்சிகள் திருப்திகரமான விளக்கம் அளிக்கத் தவறினால், அவர்களின் கட்சி பதிவு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why do you have a party when you just sitting idleTell me the reason Election Commission bans 6 parties in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->