கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் விரைவு ரெயில்..தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
The fast train stopping at Kadambur railway station South Railway announcement
குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குருவாயூர்-சென்னை விரைவு ரெயில் தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பகல் நேர ரெயிலாக சென்று வரும் ரெயில் கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில், இருமார்க்கங்களிலும் நிற்காமல் சென்று வந்தது. இந்த ரெயில் வருகிற 31ம் தேதி முதல் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், "தினமும் சென்னையில் இருந்து வரும் இந்த ரெயில் இரவு 7.53 மணிக்கு கோவில்பட்டிக்கு வந்து 7.55 மணிக்கு புறப்பட்டு செல்லும். அங்கிருந்து கடம்பூருக்கு இரவு 8.07 மணிக்கு சென்று, இரவு 8.08 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் அங்கிருந்து புறப்பட்டு செல்லும் ரெயில் இரவு 8.18 மணிக்கு வாஞ்சி மணியாச்சிக்கு சென்று, இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதே போல், மறுமார்க்கத்தில் குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரெயில் தினமும் காலை 9.28 மணிக்கு வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்துக்கு வந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, அங்கிருந்து 9.39 மணிக்கு கடம்பூர் சென்று, காலை 9.40 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடம்பூரில் சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.
English Summary
The fast train stopping at Kadambur railway station South Railway announcement