மடிக்கணினி வழங்கும் திட்டம் - விலை பட்டியலை கொடுத்த பிரபல நிறுவனங்கள்.!!
laptop companies submit price list to tn govt
சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதான் படி சுமார் 20 லட்சம் மடிக்கணினி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், இதற்கான விலைகளை கோர ஒப்பந்தம் மடிக்கணினி நிறுவனங்களுக்கு கோரப்பட்டிருந்தது.

இதையடுத்து பல நிறுவனங்கள் தங்களது விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது. இதில் டெல் நிறுவனம் ஒரு மடிக்கணினி ரூ. 40826 என்று விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது. ஏசர் நிறுவனம் ஒரு மடிக்கணினி ரூ. 23,385 என்று சமர்ப்பித்துள்ளது.
இதையடுத்து இந்த மாத இறுதிக்குள் லேப்டாப் கொள்முதல் ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. முதற்கட்டாக 10 லட்சம் மடிக்கணினி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மடிக்கணிகளை கொள்முதல் செய்வதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரவு அறிவித்தார்.
English Summary
laptop companies submit price list to tn govt