சீமான்-விஜயலட்சுமி விவகாரம்! என் முன்னாடி வர சொல்லுங்க! "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சிக்கு ரூட் போடும் 3வது லட்சுமி!
Lakshmi Ramakrishnan opinion on Seeman Vijayalakshmi issue
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்தா சென்னை காவல்துறையினர் நடிகை விஜயலட்சுமி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அவர் சீமான் தன்னை கட்டாயப்படுத்தி ஆறுமுறை கருக்கலைப்பு செய்ததாக குற்றச்சாட்டியை அடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நடிகர் விஜயலட்சுமிக்கு ஆதரவாக அவருடைய தோழியும் தமிழர் முன்னேற்ற படை அமைப்பின் தலைமை வீரலட்சுமி இருந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி திடீரென விலகி தனியாக இந்த வழக்கை சந்திக்க முடிவு செய்தார்.
இந்த நிலையை திடீரென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான தனது புகாரை நடிகர் விஜயலட்சுமி வாபஸ் பெற்றுக்கொண்டார். அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக விஜயலஷ்மி புகார் மனு வாபஸ் பெற்றாலும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வளசரவாக்கம் போலீசார் உத்தரவிட்டதை எடுத்து அவர் தனது மனைவியுடன் நேரில் ஆஜர் ஆகினார்.

மேலும் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகையும் இயக்குனமான லட்சுமி ராமகிருஷ்ணன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
பல குடும்பங்களில் உள்ள பிரச்சனைகளை சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் மூலம் தீர்த்து வைத்த லட்சுமி ராமகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் சீமான் விஜயலட்சுமி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சீமான் மற்றும் விஜயலட்சுமி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் கேமரா முன்பு வந்து பேசினால் உரிய ஆலோசனைகளை கூறுவேன். தனிப்பட்ட முறையில் என்னால் கருத்து கூற முடியாது" என தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் மூலம் சமூகத் தீர்வு காண வேண்டிய இந்த விவகாரத்தை சொல்வதெல்லாம் நிகழ்ச்சி வரை கொண்டு வந்து விட்டார்களே என இணையதள வாசிகள் கலாய்த்து வருகின்றனர்.
English Summary
Lakshmi Ramakrishnan opinion on Seeman Vijayalakshmi issue