சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்.! போக்சோவில் கூலித்தொழிலாளி கைது.!
Laborer arrested for kidnapping and raping girl in Ariyalur
அரியலூர் மாவட்டத்தில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் இலையூர் கண்டியங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் கூலித்தொழிலாளி ஜெயக்குமார்(22), 17 வயதுடைய சிறுமியை கடத்திச் சென்று கரைமேடு முந்திரி காட்டிலுள்ள தனக்கு சொந்தமான வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.
பின்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சடைந்த நிலையில், இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜெயக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த ஜெயக்குமாரின் தாயையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
Laborer arrested for kidnapping and raping girl in Ariyalur