குன்றக்குடி கவிஞர் மரு. பரமகுரு காலமானார்!
Kunrakkudi Maru Paramaguru passed away
காரைக்குடி, குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன புலவர் மரு.பரமகுரு (வயது 89) உடல்நல குறைவால் இன்று உயிரிழந்து விட்டார்.
மரு.பரமகுரு, குன்றக்குடி குரு மகா சன்னிதானங்கள், தவத்திரு குன்றக்குடி அடிகளார் மற்றும் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோரின் இலக்கிய துறை உதவியாளராக 57 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார்.
இவர் பாடுகிறேன் பரமகுரு, தெய்வத்தமிழ் மாலை போன்ற கவிதை தொகுதிகளையும் காப்பியத்தையும் எழுதி வெளியிட்டார்.
இவர் அடிகளார் ஓர் உறவு பாலம், என்ற நூலின் பதிப்பாசிரியர்களுள் ஒருவராவார். மேலும் தெய்வ தமிழ் ஆளுமை, சிந்தனைகள் போன்ற கட்டுரை நூல்களையும் சாகித்திய அகாதமிக்காக 'தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூல்' என்னும் நூலையும் உருவாக்கினார்.
நிமிட கவிஞர் விருது, தமிழ் தாத்தா உவேசா விருது, தமிழ் மாமனி விருதுகள், பட்டங்கள் போன்றவற்றை இவர் பெற்றவர். இவரது மனைவி காமாட்சி அம்மாள்.
இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மரு. பரமகுருவின் இறுதிச்சடங்கு நாளை காலை 11 மணியளவில் குன்றக்குடியில் மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
English Summary
Kunrakkudi Maru Paramaguru passed away