இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலை சிக்கியது! - Seithipunal
Seithipunal


கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக பீடி இலை பண்டல்களை கடத்த முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை மாவட்ட போலீசார் கருத்துக்கணித்து தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்து வருகின்றார், சமீப காலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது ,இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர், போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில்தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரை வழியாக மர்ம நபர்கள் படகு மூலம் பீடி இலை பண்டல்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மேற்பார்வையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு திரேஸ்புரம் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் கடலில் படகுடன் பீடி இலை பண்டல்களை விட்டுவிட்டு தப்பி சென்றனர்.

இதனைத் தொடர்ந்து படகு மற்றும் அதில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான 43 பண்டல்களில் இருந்த 1,800 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்து, அவற்றை சுங்கத்துறையில் ஒப்படைத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs. 60 lakh worth of beedi leaves attempted to be smuggled to Sri Lanka seized


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->