சல்மான் கான் வாங்கிய bullet proof காரின் விலை தெரியுமா?
Do you know price bullet proof car bought by Salman Khan
ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பின் பொழுது, மானை வேட்டையாடியதாக ஹிந்தி பட நடிகர் 'சல்மான் கான்' மீது குற்றம் சாட்டப்பட்டது.கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்தில் 2018-ம் ஆண்டு 5 ஆண்டு சிறை தண்டனை என்ற தீர்ப்பும் வழங்கப்பட்டது.

அதன் பிறகு அவருக்கு ஜாமீனும் கொடுக்கப்பட்டது.இந்நிலையில் ஹிந்தி பட முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கான் மீது கடந்த சில ஆண்டுகளாக கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அவர் வெளியே எங்கு சென்றாலும் குண்டு துளைக்காத காரில்தான் செல்கிறார்.
அதுமட்டுமின்றி, தன்னுடைய வீட்டிலும் குண்டு துளைக்காத கண்ணாடிகளை பொருத்தி இருக்கிறார். இந்த படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் அவர் தனக்கு பாதுகாப்பாக, சொந்தமாக பாதுகாவலர்களை வைத்திருக்கிறார்.
மேலும், மும்பை காவலர்களும் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியிருக்கிறது.இந்நிலையில் தனக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை உணர்ந்த சல்மான்கான், சமீபத்தில் மேலும் ஒரு குண்டு துளைக்காத காரை புதியதாக வாங்கியிருக்கிறார்.
அவர் 'மெர்சிடஸ் மேபச் ஜி.எல்.எஸ். 600' என்ற அந்த காரின் விலை ரூ.3,40,00,000ஆகும். இந்த கார் மணிக்கு 240 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடியது.மேலும், இந்தக் காரில், தானியங்கி கியர் பாக்ஸ் வசதியும் இருக்கிறது.
English Summary
Do you know price bullet proof car bought by Salman Khan