தமிழகத்தை பதறவைத்த சம்பவம்! ஆந்திராவை புறப்பட்ட தனிப்படை போலீசார் 50 பேர்!
kummudipoondy student harassment Harassment case
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, அங்கு உள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த வாரம் பள்ளி முடிந்த பிறகு, தனியாக நடந்து வீட்டுக்குச் சென்றபோது மர்ம வாலிபர் ஒருவர் சிறுமியின் பின்னால் வந்து பேச்சு தொடங்கியதாக கூறப்படுகிறது.
திடீரென, அவர் சிறுமியை மிரட்டி தூக்கிச் சென்றார். அருகே இருந்த மாந்தோப்புக்கு கடத்திச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்தார். அதனால் பயந்து கதறிய சிறுமியின் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களை பார்த்த வாலிபர் பீதி கொண்டு தப்பியோடி உள்ளார்.
பின்னர் சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மகளிடம் நடந்ததை கேட்ட பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை தொடங்கினர். குற்றவாளியை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குற்றவாளி சிறுமியை தூக்கிச் செல்வதையும், பின்னர் செல்போனில் பேசி தப்பும் காட்சியும் தெளிவாக பதிவான கண்காணிப்பு வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அந்த நேரத்தில் அந்த பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மொபைல் அழைப்புகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், 5 தனிப்படை போலீசார் 50 பேர் ஆந்திரா விரைந்து உள்ளதாகவும், விரைவில் குற்றவாளியை போலீசார் கைது செய்வார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
kummudipoondy student harassment Harassment case