தொடரும் பாதிப்பு: கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு உறுதி!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியில் இன்று 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாத வகையில் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் டெங்கு காய்ச்சல் பிரிவு அரசு மருத்துவமனைகளில் தனியாக தொடங்கவும் அனைத்து நோயாளிகள் பிரிவிலும் ஓஆர்எஸ் சத்துநீர் கரைசல் வைத்திருக்கவும் 5 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு டெங்கு பரிசோதனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் அவர்கள் பயிலும் பள்ளி மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக பகுதிகள் என மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டன. 

இதனை அடுத்து இன்று கும்பகோணம் பகுதியில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட 13 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kumbakonam 13 members confirmed dengue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->