கிருஷ்ணகிரியில் பரபரப்பு: பிரபல தொழிலதிபர் தற்கொலை! தீவிர விசாரணையில் போலீசார்!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி, காந்திநகர் பகுதி சேர்ந்தவர் சுரேஷ். இவர் சொந்தமாக ஜுவல்லரி தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். 

இன்று காலை 7 மணி அளவில் அவரது வீட்டில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. இதில் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது சுரேஷ் துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனை பார்த்து கதறிய குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தொழிலதிபர் சுரேஷ் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு பேசிவிட்டு அவரது அறையில் போய் தூங்கி இன்று காலை துப்பாக்கியால் சூட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. 

கிருஷ்ணகிரி பகுதியில் செல்வாக்குடன் இருந்த தொழிலதிபர் என்ன காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த சுரேஷ் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரது வீட்டிற்கு முன்பு திரண்டதால் கிருஷ்ணகிரி நகரில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

மேலும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Krishnangiri businessman commits suicide


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->