கிருஷ்ணகிரி : அரசு பள்ளி மாணவர்கள் ஏற்றி சென்ற வேன் லாரி மீது மோதி விபத்து! - 11 பேர் படுகாயம்!
Krishnagiri soolagiri van accident
கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில், 11 பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அரசு பள்ளி மாணவர்களை ஏற்றுச் சென்ற வேன் மீது லாரி ஒன்று கொடூரமாக மோதியது. இந்த விபத்தில் 11 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
மேலும், வேனில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். காயமடைந்தவர்களி மீட்ட பொது மக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக இன்று காலை, கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள கோபாலபுரத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த 2 வேன்கள் பெண்ணாடத்திலிருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.
அப்பொழுது இரண்டு வேன் ஓட்டுநர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாகனங்களை இயக்கியதாக கூறப்படுகிறது. விருதாச்சலம் அடுத்த கோ.ஆதனூர் அருகே 2 வேன்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
English Summary
Krishnagiri soolagiri van accident