அதிரடி கேள்வி! விஜய்யின் கொள்கை ஆசான் திருமாவளவனா? த.வெ.க-வின் ரகசியத்தை உடைத்த பா.ஜ.க! - ஏ.என்.எஸ்.பிரசாத்
Thirumavalavan Vijay ideological mentor BJP exposed secret TVK ANS Prasad
தமிழக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரை மிகக்கடுமையாகச் சாடியுள்ளார்.
"ஊழலையும் வாரிசு அரசியலையும் வேரறுக்கவே அரசியலுக்கு வந்தேன் என்று மக்களுக்கும் தொண்டர்களுக்கும் விஜய் செய்த சத்தியம் என்னவானது?" எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், விஜய்யைச் திரைமறைவில் இருந்து இயக்கும் 'கொள்கை ஆசான்' யார் என்பதையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

விஜய்யின் கொள்கை வழிகாட்டி திருமாவளவன் தான் எனத் த.வெ.க.வின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் அறிவித்ததன் பின்னணியில் உள்ள மர்மம் என்னவென்று வினவியுள்ள பிரசாத், அனைத்துக் கட்சிகளுக்கும் பாடம் எடுக்கும் திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா மூலமாக விஜய்யைக் காங்கிரஸுடன் கைகோர்க்கச் சொல்லித் தூது விடுவது ஏன் என்றும் பதிவிட்டுள்ளார்.
வெவ்வேறு துருவங்களைப் போலப் பாசாங்கு செய்துகொண்டு, பா.ஜ.க.வை எதிர்ப்பதில் மட்டும் மறைமுகமாக ஒன்றிணைந்து 'இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக' இந்த இரு துருவங்களும் செயல்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
"திரையில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், தேர்தல் நேரங்களில் புதுப்புது அரசியல் வேடங்களைப் பூண்டு வரும் திருமாவளவனும், அரசியலில் நடிக்கத் தொடங்கியுள்ள விஜய்யும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது" எனத் தனது அறிக்கையில் ஏ.என்.எஸ்.பிரசாத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Thirumavalavan Vijay ideological mentor BJP exposed secret TVK ANS Prasad