கிருஷ்ணகிரி: காரை இயக்க ஆசைப்பட்டு, பள்ளி வளாகத்திலேயே விபத்தில் உயிரிழந்த போச்சம்பள்ளி அரசு ஆசிரியை..! - Seithipunal
Seithipunal


ஓட்டுநர் தேநீர் குடிக்க சென்ற நேரத்தில், கார் இயக்க ஆசைப்பட்ட ஆசிரியை விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதுகலை இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் அமராவதி (வயது 44). இவர் தர்மபுரியில் வசித்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு நேரத்திற்கு வந்து செல்லும் வகையில், மாருதி கார் ஒன்றை புதிதாக வாங்கி இருக்கிறார். 

அமராவதிக்கு கார் ஓட்ட தெரியாத காரணத்தால், காருக்கு ஓட்டுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனது காரில் தினமும் தர்மபுரியில் இருந்து போச்சம்பள்ளி பள்ளிக்கு வந்து சென்ற நிலையில், நேற்று மாலை நேரத்தில் வகுப்புகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல காத்திருந்துள்ளார். 

ஓட்டுநர் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்ட நிலையில், அவர் கார் ஓட்டுநருக்காக காத்திருந்துள்ளார். இதன்போது, ஆசிரியைக்கு தீடீரென விபரீத எண்ணம் தோன்றியுள்ளது. ஓட்டுநர் காரை ஒட்டகையில் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்த்து வைத்ததை நினைத்து வாகனத்தை இயக்கலாம் என எண்ணியுள்ளார். 

இதனையடுத்து, காரில் ஏறி வாகனத்தை இயக்க முயற்சிக்கவே, கார் அதிவேகத்தில் சென்று பள்ளிக்கு சொந்தமான கட்டிடத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், ஆசிரியையின் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள், ஆசிரியைகள் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்க, கார் ஓட்டுனரும் பள்ளிக்குள் வந்துள்ளார். அதன்பின்னரே, அவருக்கு விபரீதம் புரிந்துள்ளது. இதனையடுத்து, அவசர ஊர்தி மூலமாக ஆசிரியை அமராவதி தர்மபுரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து மற்றும் ஆசிரியை பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Krishnagiri Pochampalli Govt School Teacher Amaravathi Died Accident when try to Car WIthout Training


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->