உதயநிதி ட்வீட்டால் கைது.! அடங்காத மனிதரை அடக்கிய காவல்துறை.!  - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்று இல்லாதவர்களுக்கு பாசிட்டிவ் இருக்கிறது என்று கூறி என்னையும் என் குடும்பத்தாரையும் அசிங்கப் படுத்தியதற்கு வாழ்த்துக்கள் என்று ஒரு வீட்டின் முன் பேனர் வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து கோவை மாநகராட்சி நிர்வாகம் அதிர்ந்து போயுள்ளது.

காரணம் கோவை மாநகராட்சிக்காகத் தான் அந்த வாழ்த்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. கோவையை சேர்ந்த இளவரசன் அவரது மனைவி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகின்றார்.

இவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று இருக்கிறது எனக் கூறி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என மாநகராட்சி நிர்வாகம் பேனர் வைத்தது. அடுத்த சில நாட்களில் பதிலுக்கு இளவரசன் இப்படி ஒரு பேனரை வைத்திருக்கிறார்.

மாநகராட்சி பேனர் வைத்த பின்னர் இளவரசன் குடும்பத்தினர் தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் தாங்கள் குடும்பத்தினருக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்திருப்பதாகவும் கூறி அந்த பேனர் வைத்திருக்கிறார் இளவரசன்.

இதையடுத்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் இளவரசன் மனைவிக்கு தொற்று இருப்பது உறுதியானது. அவர் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்வதாக கூறினார். ஆனால் வெளியே சென்று பரிசோதனை செய்துகொண்டுள்ளார்.

இளவரசனும் அவரது குடும்பத்தினரும் ஆரம்பம் முதலே நோய் தடுப்பு நடவடிக்கை ஒத்து வரவில்லை என்று கூறி வந்தது மாநகராட்சி நிர்வாகம். மேலும், மாநகராட்சியின் புகாரின்பேரில் இளவரசன் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து திமுக உதயநிதி தனது ட்வீட்டர் பக்கத்தில் கிண்டல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kovai men arrested by police 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->