கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக 50 இளைஞர்கள் - அதிரவைக்கும் பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 23ஆம் தேதி (தீபாவளிக்கு முதல் நாள்) கோவை கோட்டை ஈஸ்வரன் என்ற இந்து கோவிலுக்கு முன்னால், முபின் என்ற நபர் ஒட்டி வந்த கார் வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தில் முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த வழக்கு தற்போது என்ஐஏ அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில் தமிழக  போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து பிரபல மாலை நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, 

"உளவுத்துறை போலீசார் முபீனை போல ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படும் இளைஞர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று விசாரணை மேற்கொண்டதாகவும், அந்த விசாரணையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 50 இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் ஆதரவாளர்களாக இருப்பது தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி குறித்து எந்த அதிகார தகவல் எதுவும் இல்லாதபோதில், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ள அந்த செய்தியில், கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிறகு தற்போது போலீசார் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்த விசாரணையில் 50க்கும் மேற்பட் இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கருத்தால் ஈர்க்கப்பட்டு, அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. அவர்களை கண்டுபிடித்த நல்வழி பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kovai Car Blast Case Some more info


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->