#Breaking: கொள்ளிட ஆற்றில் 6 பேர் உயிரிழந்த விவகாரம்.! நிவாரணம் கேட்டு உறவினர்கள் கெடுபிடி.!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மாலை தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்ய வந்த நிலையில் இரவு அங்கேயே தங்கினர். 

அதன் பின் அவர்களில் ஆறு பேர் மாதா கோவில் அருகே இருக்கும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்பொழுது அணை திறக்கப்பட்டதால் தண்ணீரின் வேகம் அதிகரித்ததில் அவர்கள் திடீரென அடித்துச் செல்லப்பட்டனர். 

அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் விரைந்து வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஆறு பேரையும் தேடினர். இந்த ஆறு பேரும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அவர்களது நண்பர்கள் மற்றும்  உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இந்த விவாகரத்தில் அரசு நிவாரணம் அறிவித்தால் தான் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல முடியும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kollidam 6 member death issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->