கொடநாடு வழக்கு || நீதிபதி கையில் 3 பென் டிரைவ்.!! சிக்கபோகும் முக்கிய புள்ளிகள்.!! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜம்சீர் அலி, தீபு ஆகியோரை போலீசார் கைது செய்யும் போது அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளில் பதிவான தகவல் பரிமாற்ற விபரங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

ஆய்வகத்தில் கிடைத்த விவரங்கள் அனைத்தையும் சிபிசிஐடி போலீசார் 3 பென் டிரைவ்களை சேகரித்து விசாரணை நீதிபதியிடம் சமர்ப்பித்தனர். இந்த 3 பென் டிரைவ்களும் விரைவில் கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தகவல்கள் பதிவு செய்து பெறப்பட உள்ளது. இந்த ஆய்வு முடிவுகளில் சிபிசிஐடி போலீசாருக்கு முக்கிய ஆதாரங்கள் கிடைக்கலாம். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளின் விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

KodaNadu case CBCID submitted 3 pen drives to district judge


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->