16 வயது பள்ளி மாணவியை கன்னியாகுமரி கடத்தி சென்ற கயவன்.! சுற்றிவளைத்த இரு மாநில போலீசார்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி வந்த, கன்னியாகுமரியை சேர்ந்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளன.

கேரள மாநிலத்தில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி வந்த கன்னியாகுமரி மாவட்ட 24 வயது என்பவர் இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் திருவல்லம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை பகுதியில் மாணவி இருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து நித்திரவிளைக்கு விரைந்து வந்த கேரள போலீசார், தமிழக போலீசாரின் உதவியுடன் மாணவிகளை பத்திரமாக மீட்டனர். மேலும், மாணவியை கடத்திய பிரகாஷ் என்ற 24 வயது இளைஞரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

இருவரையும், கேரளா, திருவல்லம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala school girl kidnapped in kanniyakumari


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->