முறுக்கு மீசையுடன் வளம் பெரும் இளம்பெண்.! யார் என்னை கேலி, கிண்டல் செய்தல் எனக்கென்ன?!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஷைஜூ. இவரது முகத்தில் ஆண்களை போல மீசை உள்ளது. இந்த படத்தை அவர் சமூகவலைதளத்தில் தனது டி.பி.யாக வைத்துள்ளார். இதனால் பலரும் அவரை கேலி செய்துள்ளனர். 

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 

"கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எனது முகத்தில்  உதட்டின் மேல் பகுதியில் லேசான பூனை முடி காணப்பட்டது. அது எனக்கு பிடித்து இருந்ததால் நான் அந்த முடியை அகற்றவில்லை. அதனை வளர்க்க தொடங்கிய பின்னர் மீசை இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை.

இதனை பார்த்து பலரும் என்னை கேலி செய்தனர். அதை பற்றி நான் கவலைப்படவில்லை. கொரோனா காலக்கட்டத்தில் மாஸ்க் அணிந்தால் எனது மீசை வெளியே தெரியாது என்பதால் மாஸ்க் அணிவதற்கு கூட எனக்கு வெறுப்பாக இருந்தது. 

இந்த மீசை எனது மகளுக்கும் பிடித்து இருக்கிறது. பின்னர் நான் எதற்கு மற்றவர்கள் கூறுவதை கேட்டு வருத்தப்பட வேண்டும். யார் என்னை கேலி செய்தாலும் நான் எனது மீசையை அகற்ற போவதில்லை". என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kerala Resourceful young lady with curly mustache


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->