அரசு விடுதியில் புகுந்து மாணவ மாணவிகளை தாக்கிய கேரளா சிறுவன்.! - Seithipunal
Seithipunal


அரசு விடுதியில் புகுந்து மாணவ மாணவிகளை தாக்கிய கேரளா சிறுவன்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவக்கரை அருகே மாவுத்தம்பதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் தலைமை ஆசிரியராக கண்ணதாசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
 
அந்த புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது:- "மாவுத்தம்பதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியின் விடுதியில் ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். 

இந்த விடுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம் பாறைக்களம் பகுதியைச் சேர்ந்த பதினேழு வயது சிறுவன் ஒருவன் இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து விடுதிக்குள் புகுந்துள்ளார்.

அதன் பின்னர் அந்த சிறுவன் அங்கிருந்த மாணவர்கள் சிலரை தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை விடுதியில் இருந்த ஆசிரியை ஒருவர் பார்த்து தட்டி கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுவன், அந்த ஆசிரியையை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். 

இந்த சிறுவன் மாணவர் விடுதி மட்டுமின்றி மாணவிகள் விடுதிக்குள்ளும் சென்று, அவர்களைத் தாக்கி, பயமுறுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால், மாணவ-மாணவிகள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர். 

எனவே மாணவ-மாணவிகளை அச்சுறுத்தி வரும் சிறுவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kerala boy attack govt hostel students in coimbatore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->