மாயமான மகள் வீட்டிற்கு வந்துவிடுவார் என்ற ஏக்கத்தில் தந்தை.. கரூரில் பெரும் சோகம்..! - Seithipunal
Seithipunal


21 வயது பெண்மணி மாயமான நிலையில், காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர். மேலும், மகள் எப்படியாவது வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் பெண்ணின் தந்தை கவலையுடன் இருக்கிறார்.

கரூர் நகர பகுதியை சார்ந்தவர் முனியப்பன். இவருக்கு 21 வயதுடைய தனலட்சுமி என்ற மகள் இருக்கிறார். தனலட்சுமி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தினமும் பணிக்கு செல்லும் தனலட்சுமி, பணி முடிந்ததும் வீட்டிற்கு வந்துவிடுவார். 

இந்நிலையில், சம்பவத்தன்று பணிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட தனலட்சுமி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதறிப்போன தனலட்சுமியின் தந்தை முனியப்பன், மகளை தனக்கு தெரிந்த இடங்கள் மற்றும் மகளின் தோழிகள் வீட்டிற்கு சென்று தேடியுள்ளார். 

எங்கு தேடியும் மகள் கிடைக்காததால், இந்த விஷயம் தொடர்பாக கரூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள கரூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர் பாண்டியன், தனலட்சுமி மாயமானது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

மேலும், தனலட்சுமி கடத்தப்பட்டாரா? அல்லது வீட்டில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு தோழிகளின் வீட்டிற்கு சென்றுள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் எப்படியும் பத்திரமாக வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தனலட்சுமியின் தந்தை முனியப்பன் கவலையுடன் இருந்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Woman Dhanalatsumi Aged 21 Missing Father Feeling Sad Daughter Get back Home Police Investigation


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal