கரூர் விஜய் கட்சியின் மாவட்ட செயலாளர் அதிரடி கைது!
Karur Stampede TN Govt
கரூரில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை முன்கூட்டியே எச்சரித்தும் விதிகளை பின்பற்றாத குற்றச்சாட்டில் தமிழக வெற்றிக்கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மதியழகனை கரூரில் போலீசார் இன்று மாலை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்ட நெரிசலுக்குப் பின்னணி காரணங்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும் விசாரிக்கும் நடவடிக்கையின் பகுதியாக இந்த கைது நடந்ததாக கூறப்படுகிறது.
மேலும், தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இன்று இரவுக்குள் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. சம்பவத்துக்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.