தலைமுடியை பெற்றோர் வெட்டியதால், தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி.! - Seithipunal
Seithipunal


சமீபகாலமாகவே பள்ளி சிறுவர், சிறுமிகளின் தற்கொலை செய்திகள் அதிகமாக வந்த வண்ணம் இருக்கிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு அரசு தலையிட்டு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பிலிருந்தும் வரும் கோரிக்கையாக இருக்கிறது.

இத்தகைய சூழலில், கரூரில் ஒரு பெண் பெற்றோர் முடிவெட்டி விட்டதற்காக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெண்ணமலை பகுதியை சேர்ந்த ஸ்ரீனா என்ற இளம்பெண் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவருடைய தலையில் அதிக பொடுகு இருந்தது. இதனால், அந்த மாணவியின் பெற்றோர் அந்தப் பெண்ணிற்கு அழகு நிலையத்திற்கு அழைத்துச் சென்று பாப் கட்டிங் செய்துள்ளனர். இதன் காரணமாக அந்த மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இத்தகைய சூழலில் சம்பவ தினத்தன்று அதிகாலை நேரத்தில் வீட்டிலிருந்த அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karur school Girl commit suicide for hair losses


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->