மத்திய உள்துறை அமைச்சர் அமித்-ஷா இல்லத்திற்கு சென்றுள்ள செங்கோட்டையன்..!
Sengottaiyan has visited Union Home Minister Amit Shahs residence
முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனை, கட்சியின் பொதுச்சசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார். இந்நிலையில் செங்கோட்டையன் இன்று டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க சென்றுள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்த செங்கோட்டையன் கூறியதோடு, அதற்கு அதிமுக பொதுச்செயலாளார் இபிஎஸ்க்கு 10 நாள் கெடுவும் விடுத்தார்.
இதனால் கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கிய சம்பவம் தமிழக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செங்கோட்டையன் ஹரித்வாருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதாக கூறி சென்ற நிலையில், இன்று இரவு டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக, அவரது வீட்டிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Sengottaiyan has visited Union Home Minister Amit Shahs residence