பழிக்குப்பழி?.. குளித்தலை அருகே பிரபல ரௌடி வெட்டிக்கொலை..! - Seithipunal
Seithipunal


குளித்தலை அருகேயுள்ள கருப்பத்தூர் பகுதியை சார்ந்த ரௌடி கோபால், மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டான். 

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, கருப்பத்தூர் பகுதியை சார்ந்த ரௌடி கோபால் (வயது 53). இவரது மனைவி பொன்னுமணி. இந்த தம்பதிகளுக்கு தமிழ்ப்பொன்னி மற்றும் கயல்பொன்னி என்ற இரண்டு மகள்களும், நரேன் கார்த்திக், நரேன் ராஜ் என்ற இரட்டை மகன்களும் என 4 பிள்ளைகள் உள்ளனர். 

அகில இந்திய தேவேந்திர குல குழுத்தலைவர் பசுபதி பாண்டியனின் ஆதரவாளராக இருந்து வரும் கோபாலின் மீது, தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று அதிகாலை கோபால் வீட்டிற்கு அருகேயுள்ள தனக்கு சொந்தமான வயல்வெளிக்கு சென்றுள்ளார். 

இதன்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை பயங்கர ஆயுதத்தால் வெட்டிப்படுகொலை செய்து தப்பி சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த லாலாபேட்டை காவல் நிலைய அதிகாரிகள் கோபாலின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? பழிக்குப்பழியாக கொலை நடந்ததா? என விசாரணை நடந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Kulithalai Famous Rowdy Gopal Devendirar Murdered by Strangers Police Investigation


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal