கரூர் : ஐடி அதிகாரிகளை தாக்கிய குண்டர்களின் ஜாமின் ரத்து - உயர்நீதிமன்ற கிளை அதிரடி! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூன் மாதம் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர், திமுக பிரமுகர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் அவரின் உள்ளிட்ட பலரின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, திமுக ஆதரவாளர்களும், அமைச்சரின் ஆதரவாளர்களும் வருமானவரித்துறை அதிகாரிகளின் வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்.

மேலும், வருமானவரித்துறை பெண் அதிகாரி ஒருவருடன் தகாத முறையில் நடந்தது மட்டுமில்லாமல், அவரை தாக்கி விரட்டி அடித்தனர்.

இந்த சம்பவத்தில் 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைதும் செய்தனர். பின்னர் இவர்கள் அனைவருக்கும் கரூர் கேளாமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவின்படி, ஜாமின் ரத்து செய்யப்படுகிறது. ஜாமின் பெற்ற 19 பேரும் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karur IT Raid officers attack case issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->