கரூர் சாலை விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட நால்வர் பலி!
Karur Car Accident
கரூர் மாவட்டம் செம்மடை நாவல் நகர் அருகே இன்று நடைபெற்ற பெரும் சாலை விபத்தில் நால்வர் உயிரிழப்பு மற்றும் பலர் காயம் ஏற்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, முன்னால் சென்ற டிராக்டரை மோதியது. அதன் தாக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பு சுவரை கடந்து எதிர்திசையில் வந்த சுற்றுலா வேனை நேருக்கு நேர் மோதியது.
கோவில்பட்டியில் இருந்து சுற்றுலா பயணமாக வந்திருந்த அந்த வேனில் இருந்த ஓட்டுநர், இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து நிகழ்ந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும் பதட்டமும் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரின் தவறா? அல்லது வேறு காரணமா என்பதற்கான விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.