அக்கடாவென நின்ற லாரி.. அதிவேகமாக வந்த கார்.. நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் அகால மரணம்.! - Seithipunal
Seithipunal


கார் ஓட்டுனரின் கவனக்குறைவால், நின்று கொண்டு இருந்த லாரி மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா மாவட்டம் பபலேஷ்வரா, கோனெக்கெனெஹள்ளி கிராமத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில், அதிகாலை நேரத்தில் லாரி பழுதாகி சாலையோரம் நின்றது. பழுதை சரி செய்யும் பணியில் லாரி ஓட்டுநர் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். 

இதன்போது, இதே தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டு இருந்த லாரியின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில், லாரியின் முன்புறமும் - காரின் முன்புறமும் பலத்த சேதம் அடைந்தது. 

விபத்தில், லாரி ஓட்டுநர், காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 3 பேர் படுகாயத்துடன் அலறித்துடித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விஜயபுரா காவல் துறையினர், படுகாயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் பபலேஷ்வரா பகுதியை சார்ந்த பசவராஜ் மூண்டவாடி (வயது 42), மனைவி சாவித்ரி (வயது 37), மகள் ஆராத்யா (வயது 8) என்பது தெரியவந்துள்ளது. லாரி ஓட்டுநர் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. பசவராஜ் குடும்பத்தினருடன் கோவா சென்றுவிட்டு மீண்டும் வருகையில் விபத்து நேர்ந்துள்ளது. மேலும், கார் ஓட்டுனரின் கவனக்குறைவால் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka Vijayapura Car Lorry Accident 4 Died on Spot Police Investigation


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->