கர்நாடக எல்லையில் இருந்த 7 பட்டாசு கடைகளுக்கு சீல்! அதிகாரிகள் நடவடிக்கை!
Karnataka border 7 firecracker shops sealed
கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் நவீன் என்பவர் பட்டாசு கடை நடத்தி வந்தார். இந்த கடையில் கடந்த 7 தேதி தீ விபத்து ஏற்பட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 இளைஞர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காயம் அடைந்து 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர்.
இந்நிலையில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த இரு சக்கர வாகனங்கள், சரக்கு லாரி என 15 க்கு மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

கடந்த 8 ஆம் தேதி கர்நாடகா மாநில முதல் மந்திரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் பட்டாசு கடை வெடி விபத்து வழக்கு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றியுள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து 19ஆம் தேதி கர்நாடகா மாநில சிஐடி பிரிவு போலீசார் வெடி விபத்து நடந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தீயில் கருதி சேதம் அடைந்த வாகனங்களை போட்டோ எடுத்தனர்.
நேற்று முன்தினம் சிஐடி பிரிவு டிஜிபி எம்எல்ஏ மற்றும் ஐஜிபி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த 7 பட்டாசு கடைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் ஆனேக்கல் தாலுகாவில் இருந்த அனைத்து பட்டாசு கடைகளுக்கும் சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரியவந்துள்ளது.
English Summary
Karnataka border 7 firecracker shops sealed