தந்தையிடம் அதிக பாசமாக இருந்த 3 வயது மகள், தாயால் கொடூர கொலை.. அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் மல்லத்தஹள்ளி பகுதியை சார்ந்தவர் ஈரண்ணா. இவரது மனைவி சுதா (வயது 35). இவர்கள் இருவருக்கும் 3 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறார். ஈரண்ணா டைல்ஸ் விற்பனை செய்யும் கடையில் தொழிலாளியாகவும், சுதா வீட்டு வேலை செய்யும் பெண்மணியாகவும் இருந்து வந்துள்ளார். கணவன் - மனைவியிடையே அவ்வப்போது குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று மதியமும் தம்பதிகளுக்குள் சண்டை ஏற்பட்ட நிலையில், சண்டைக்கு பின்னர் ஈரண்ணா பணிக்கு சென்றுவிட்டார். பின்னர் சுதா தனது குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுவிடவே, மாலையில் கணவருக்கு தொடர்பு கொண்ட சுதா குழந்தைக்கு மஞ்சூரியன் வாங்க கடைக்கு செல்கையில் அவர் மாயமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஈரண்ணா கடையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். 

பின்னர், தம்பதிகள் இருவரும் குழந்தையை தேடி அலைந்த நிலையில், இது தொடர்பாக அங்குள்ள ஞானபாரதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குழந்தையை தேடி வந்த நிலையில், குழந்தை அங்குள்ள அன்னபூர்ணேஷ் நகர் பகுதியில் பிணமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பிணமாக உள்ள குழந்தை ஈரண்ணா மற்றும் சுதாவின் குழந்தை என்பதை உறுதி செய்த நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணையில் சுதா காவல் துறையினரின் சந்தேக பார்வையில் சிக்கவே, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த விசாரணையில், சுதா தனது 3 வயது குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இது தொடர்பான வாக்குமூலத்தில், " எனக்கும் - கணவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு நடக்கும். தந்தைக்கு ஆதரவாக 3 வயது குழந்தை அவ்வப்போது பேசி வந்தது. தந்தையும் குழந்தையின் மீது அதிக பாசமாக இருந்து வந்தார். சம்பவத்தன்று மதியம் எனக்கும் - கணவருக்கும் இடையே டிவியில் சேனல் மாற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதன்போது, தந்தைக்கு ஆதரவாக எனது மகள் பேசினார். இதனால் குழந்தையை கொலை செய்ய நான் முடிவெடுத்து கொலை செய்தேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bangalore Mother Killed his 3 Year old Child due to baby Lot of Love his Father


கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்துAdvertisement

கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து
Seithipunal