காரைக்குடியில் டெபாசிட் இழந்து சீமான் படுதோல்வி! தவெக வேட்பாளர் டாக்டர் டி.கே. பிரபு வெற்றி!
Karaikudi Results TVK Dr TK Prabhu Clinches Victory Seeman Forfeits Deposit
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, காரைக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இன்று காலை முதல் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தவெக வேட்பாளர் டாக்டர் டி.கே. பிரபு தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார்.
அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடியை விட 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
இத்தொகுதியில் அமமுக வேட்பாளர் மூன்றாம் இடத்தைப் பிடிக்க, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டுப் படுதோல்வியைச் சந்தித்துள்ளார்.
ஒரு முக்கிய அரசியல் கட்சித் தலைவரான சீமான், இத்தேர்தலில் தனது வைப்புத் தொகையை (Deposit) இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Karaikudi Results TVK Dr TK Prabhu Clinches Victory Seeman Forfeits Deposit