மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகனுக்கு கத்தி குத்து.! அமைதியாய் நின்றவரை அறுத்துப்போட்டு சென்ற தெருவாசி.! - Seithipunal
Seithipunal


காரைக்கால் அருகே மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகனுக்கு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி : காரைக்கால் கட்டளை பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன். 36 வயதாகும் இவர் காரைக்கால் தருமபுரம் தெருவில் வசித்து வரும் இவரது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

தனது மகள் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் வாங்குவதற்காக மாமியார் வீட்டுக்கு சென்ற காளீஸ்வரன், மாமியார் வீடு பூட்டி இருந்ததால், தெரு ஓரமாக அமைதியாக காத்திருந்துள்ளார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (40 வயது) என்பவர், ஓரமாக நின்று கொண்டிருந்த காளீஸ்வரனிடம், "இங்கு ஏன் நிற்கிறாய்? யார் நீ? என்ன ஊர்?" என்று விசாரித்துள்ளார்.

இதற்கு காளீஸ்வரன், "என்னை கேள்வி கேட்பதற்கு நீ யார்? உன்னிடம் நான் அனைத்து தகவலையும் சொல்லவேண்டுமா? நான் இங்கு நிற்பதற்கு யார் அனுமதி வேண்டும்?" என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவம், தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் காளீஸ்வரன் பின்பக்க கழுத்தில் கிழித்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.

அப்போது அக்கம் பக்கத்தில் இருந்த தெருவாசிகள், காளீஸ்வரனை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், காளீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பரமசிவத்தை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KARAIKAL ATTEMPT MURDER


கருத்துக் கணிப்பு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்.,
Seithipunal