வீடீயோ கான்பரன்ஸ் மூலம் திருமணம்.. அனுமதி கொடுத்த உயர்நீதிமன்றம்.!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான வம்சி சுதர்ஷனி என்ற இளம் பெண் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், "இந்திய வம்சாவளியான என்பவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார். அவர் அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர் என்றும், தாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். 

அதன்படி கடந்த மே 5ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள ஆன்லைனில் விண்ணப் பித்து, பின்னர் சம்பந்த பட்ட திருமண பதிவு அதிகாரி முன்பு இருவரும் நேரில் ஆஜரானோம். 30 நாட்கள் அவகாசம் எடுக்க வேண்டும் என்று அவர் நிபந்தனை செய்தார். 

ஆனால், 30 நாட்கள் ஆனப்பின்னும், எங்கள் விண்ணத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ராகுல் விடுமுறையை நீட்டிக்க முடியாமல் அமெரிக்கா சென்றுவிட்டார்.

அவர் மீண்டும் இந்தியா வந்தால் அதிக பண இழப்பு ஏற்படும். எனவே, ஆன்லைன் கான்ஃபரன்ஸ் மூலம் திருமணம் செய்துகொள்ள அனுமதி வேண்டும்." என்று தெரிவித்து இருந்தார். இந்த மனு விசாரணையில், இதற்கு அனுமதி கொடுத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanyakumari women asked to marriage on Video


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->