ஐயா என்னைய விட்டுடுங்கய்யா.. நான் ஊரைவிட்டே செல்கிறேன் - ஆவேச பேச்சு ஆப்பாக அமைந்ததால் சோகம்.! - Seithipunal
Seithipunal


துபாய் மற்றும் பக்ரைன் போன்ற நாடுகளுக்குச் சென்று கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் நிர்மல். இவர் அந்நாட்டு சட்ட திட்டத்துடன், நமது நாட்டு சட்ட திட்டத்தை ஒப்பிட்டு பேசிய நிலையில், கத்தியுடன் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். 

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் காஞ்சிரவிளை பகுதியைச் சார்ந்தவர் நிர்மல். இவர் முகநூலில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, கத்தியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து வீடியோ காட்சியில், சீர்காழியில் நடைபெற்ற இரட்டை கொலை தொடர்பாகவும், அதில் கொள்ளையர்களின் கைகளை எப்படி வெட்ட வேண்டும் என்று, தனது கைகளில் கத்தியுடன் வாழைமட்டையை வெட்டி காட்டினார். 

மேலும், தான் தங்கியிருந்து பணியாற்றி வந்த பக்ரைன் மற்றும் துபாய் நாடுகளில், கொள்ளையர்களுக்கு இப்படித்தான் தண்டனை கொடுப்பார்கள் என்றும் கூறினார். நிர்மல் கைகளில் கத்தியுடன் வெளியிட்ட வீடியோ பெரும் வைரலாகவே, காவல்துறையினர் இது தொடர்பாக விசாரிக்க தொடங்கினார். 

இதனையடுத்து காவல்துறையினர் விசாரணைக்கு பயந்து நிர்மல் வீட்டை விட்டு வெளியே செல்லாமல், வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, நான் பேசிய கருத்து தவறு ஒன்றும் இல்லை. ஆனால் கத்தியுடன் பேசியது தவறு என்று மன்னிப்பு கேட்டு, நான் தமிழகத்தை விட்டு வெளியேறி கேரள செல்லப் போவதாக தெரிவித்துள்ளார். நிர்மல் தலைமறைவாக இருப்பதால் காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Trending Video Person Missing due to Fear of Police Investigation


கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்துAdvertisement

கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து
Seithipunal