4 ஆண்டுகளாக போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த ரவுடி! கையும் களவுமாக பிடித்த குமரி போலீசார்!
Kanyakumari murder case wanted rowdy arrested after 4 years
கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பவர்கள் மீது நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் தனி படையை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் 4 ஆண்டுகளாக கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட செந்தில் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2019 கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் செந்தில் (வயது 66) என்பவர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்திலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
பின்னர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு செந்தில் ஆஜராகாமல் தலைமுறைவாகி விட்டதால் கடந்த 2019 ஆம் ஆண்டு அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று காலை போலீசார் செந்திலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளியை வடசேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளதால் ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kanyakumari murder case wanted rowdy arrested after 4 years