திட்டமிட்டு வீசப்பட்ட நாடக காதல் வலை.. சிக்கிக்கொண்ட 14 வயது சிறுமிக்கு அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை மார்த்தாண்டம் அருகேயுள்ள மருதாம்பாறை பச்சைக்காவு பகுதியை சார்ந்தவர் ஜான் பென்னட் (வயது 22). இவர் என்ஜினியராக இருந்து வரும் நிலையில், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

ஜான் பென்னட் தினமும் பேருந்தில் பணிக்கு சென்று வந்த போது, மார்த்தாண்டம் பகுதியை சார்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதல் வலையில் வீழ்த்த துவங்கியுள்ளார். முதலில் நட்பாக பேசுவது போல பேசி, பின்னர் காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறுமியின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அவருக்கு உதவியாக சிறுமியின் தாயும் மருத்துவமனையில் இருந்துள்ளார். இதனால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

இந்த தகவலை அறிந்த காமுகன், சிறுமியை சீரழிக்க திட்டமிட்டு வீட்டிற்கு வந்து ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதன்பின்னர் கொடூரன் தலைமறைவாகவே, அதிர்ச்சியடைந்த சிறுமி அங்குள்ள மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஜான் பென்னட்டை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari girl Sexual abuse by Drama Lover Police Search Culprit


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal