குமரியில் பதற்றம்: பெண் துணை தாசில்தாருக்கு சிறைத்தண்டனை! காரணம் என்ன?
Kanyakumari female asst Tahsildar jail
கன்னியாகுமாரி, கண்டன்விளை மட விளாகம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 7 சென்ட் விவசாய நிலம் உள்ளது.
அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்றி தரக்கோரி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
விண்ணப்பித்தை பரிசீலித்த துணை தாசில்தார் தரிசு நிலமாக மாற்ற ரூ. 25 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஸ்வரி இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஸ்வரிடம் நேற்று இரசாயன பவுடர் தடவியல் ரூ. 25 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

அதன்படி ஜெகதீஸ்வரி கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த துணை தாசில்தாரிடம் இரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுத்துள்ளார்.
அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் துணை தாசில்தார் பணம் வாங்குவதை அலுவலகத்திலேயே வைத்து கையும் காலமாக பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும் தாலுகா அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மதியம் 1 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெற்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் துணை தாசில்தார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். வருகின்ற 26 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து துணை தாசில்தார் தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் போலீசார் இந்த விவகாரத்தில் வேறு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள துணை தாசில்தார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
English Summary
Kanyakumari female asst Tahsildar jail