கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை! ஏன் தெரியுமா?
Kanyakumari district 4th December local holiday
கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி, நாகர்கோவிலில் உள்ள புனித சவேரியார் தேவாலய திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வருகின்ற 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
சவேரியார் பேராலய திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8 ஆம் நாளான டிசம்பர் 1ஆம் தேதி மாலை 6.30 மணி குழித்துறை மறைமாவட்ட அருள்பணியாளா்கள் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றுவர்.

இரண்டாம் தேதி மாலை 6.30 மணி அளவில் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ் திருப்பலியும் இரவு 10.30 மணி அளவில் சவேரியாரின் தேர் பவானியும் நடைபெற உள்ளது.
திருவிழா நிறைவு நாளான டிசம்பர் 4 ஆம் தேதி பெருவிழா திருப்பலி நிறைவேற்றப்படும். இதில் திருவனந்தபுரம் உயா் மறைமாவட்ட ஆயர் தலைமையேற்று நிறைவேற்றி மறையுரையாற்றுவார்.
English Summary
Kanyakumari district 4th December local holiday