மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை .. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! 
                                    
                                    
                                    Kanniyakumari local holiday for maha Shivaratri 
 
                                 
                               
                                
                                      
                                            மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று  உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்து நாட்காட்டிபடி பால்குண மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி அன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும். இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று  உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.
மேலும் வருகிற மார்ச் 1ஆம் தேதி விடப்படும் விடுமுறைக்கு பதிலாக இரண்டாவது சனிக்கிழமை ஆன மார்ச் 12ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                        Kanniyakumari local holiday for maha Shivaratri