தறிகெட்டு ஓடி நடுரோட்டில் கவிழ்ந்த வேன்: தூக்கி வீசப்பட்ட பயணிகள்!
Kangayam near Van overturns 11 injured
திருப்பூர், காங்கேயம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் ஓட்டுநர் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
திருப்பூர், உடுமலைப்பேட்டை பகுதியில் இருந்து இன்று அதிகாலை கூலி வேலைக்காக ஆட்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று நாமக்கல் மாவட்டத்தை நோக்கி புறப்பட்டது.
இந்த வேன் காங்கேயம் வழியே ஈரோடு நோக்கி இன்று காலை 7 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது காங்கேயம் பழைய கோட்டைச்சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலை வேகத்தடையில் வேன் ஏறி இறங்கிய போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 11 பேர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அவசர ஊர்தி மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Kangayam near Van overturns 11 injured