காஞ்சிபுரத்தில் 49 பேர் குண்டர் சட்டத்தில் சிறை! - Seithipunal
Seithipunal


கடந்த ஓராண்டில் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 49 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை, போலீசார் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமான விசாரணை மூலம் முடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஓராண்டில் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட  பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என 568 நபர்களில் இதுவரை 120 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இதில், 49 நபர்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஓராண்டு நன்னடத்தை, பிணைய பத்திரம் பெறப்பட்டும், பிணையத்தை மீறி குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 26 நபர்களை ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் சில குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 234 நபர்களை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக கடந்த ஆண்டு மட்டும் 779 நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kanchipuram kundas 49 jail


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->