காஞ்சிபுரத்தில் மின் ஊழியர்கள் தர்ணா போராட்டம்: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


காஞ்சிபுர, ஒலி முகமது பேட்டையில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் பல உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிறுத்தம் செய்ய வேண்டும் எனவும் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த 2018 ஆம் ஆண்டு, மின்வாரியத்தில் தொழில் சங்கங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். 

10 வருடங்களுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் தி.மு.க ஆட்சி பெற்றவுடன் நிரந்தரம் செய்வார்கள் என்று முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்திருந்தார். 

தற்போது முதல்வர் அதனை நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். 

இந்த போராட்டத்தில் கோட்டி மாநில தலைவர், கோட்டி காஞ்சிபுரம் செயலாளர், கோட்டி தீட்ட பொறுப்பாளர், திட்ட துணை தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram electricity workers protest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->