காஞ்சிபுரம் : குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்து.. மேலும் ஒருவர் உயிரிழப்பு.. 12 ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம்  மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரத்தை அடுத்த வளதோட்டம் பகுதியில் செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை குடோனில், கடந்த மார்ச் 22ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 27 தொழிலாளிகள் பாதிக்கப்பட்டனர். இதில், 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இந்த வெடி விபத்தில் படுகாயமடைந்த 18 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படடு வந்தது.

இதனிடையே வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இருவரும் இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணமும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பட்டாசு வெடி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த நிலையில், இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram crackers factory accident again one death totaly 12


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->