தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்ல ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய கமல் ஹாசன்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தொடர்ந்து 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணிகள் அனைத்தும் சேர்த்து 158 தொகுதிகளில் வெற்றிவாகை சூட்டியுள்ளது.

அ.தி.மு.க. - தி.மு.க. - 130 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - காங்.- 14 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - விடுதலை சிறுத்தை கட்சிகள் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - கொ.ம.தே.க. - 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - முஸ்லிம் லீக் - 3 இடங்களில் நேரடியாகவும் இந்த தேர்தலில் மோதிய நிலையில், இறுதியில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி அடைந்தது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், " பெருவெற்றி பெற்றுள்ள மு.க ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Hassan Congrats to DMK MK Stalin TN Election 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal