கள்ளக்குறிச்சி பழங்கால முருகன் சிலை.. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி தச்சூர் சிவன் கோயில் பழங்கால முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தடயம் என்ற பத்திரிக்கையில் முருகன் சிலை தொடர்பான புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ஹோம் லேண்ட் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திடம் இருப்பதை சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சிலை கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் சிவன் கோயில் முருகன் சிலையாகும். மேலும், இந்த சிலை 7ம் நூற்றாண்டு பல்லவர் கால முருகன் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்த அடிப்படையில், கைப்பற்றப்பட்ட முருகன் சிலையை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kallakkurichchi old murugan statue recover in America


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->