பெயர் வைத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு! உற்சாகத்தில் உடன்பிறப்புகள்!
Kalaingar Ninaivu Noolakam
மதுரையில் கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவு நுாலகம், வரும் ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசனை பிறப்பித்துள்ளது.
சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நினைவு நுாலகத்தை போன்று, மதுரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நுாலகம் கட்டும் பணி, ஜனவரி 1ல் துவங்கப்பட்ட நிலையில், அதற்காக 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டு வரும் இந்த பிரமாண்ட நூலகத்தில், மொத்தம் ஆறு தளங்கள் அமைகிறது. முதல் தளம் 3,110 சதுர அடியில் குழந்தைகள் நுாலகப் பிரிவு, பருவ இதழ்கள், நாளிதழ்கள் பிரிவுகளும் இடம்பெறுகின்றன.
இரண்டாம் தளத்தில், தமிழ் நுால்கள் பிரிவும்; மூன்றாம் தளத்தில், ஆங்கில நுால்கள் பிரிவும் அமைய உள்ளன. நான்காம் தளத்தில், அமர்ந்து படிக்கும் வசதியுடன் கூடிய ஆங்கில நுால் பிரிவு அமையவுள்ளது.

ஐந்தாம் தளத்தில் மின் நுாலகம், அரிய நுால்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நுால்கள் உள்ளிட்ட பிரிவுகள் அமையவுள்ளன. ஆறாம் தளத்தில், கூட்ட அரங்கு, நுால் கொள்முதல் பிரிவு, நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை அமையவுள்ளன. தற்போது இந்த நூலகத்தின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசால் மதுரையில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு, 'கலைஞர் நூற்றாண்டு நூலகம்' என பெயரிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், வரும் ஜூன் மாதம் முதல் வாசகர்களின் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
English Summary
Kalaingar Ninaivu Noolakam