கலைஞர் நினைவு நாள்..பெரியகுளத்தில் திமுகவினர் அஞ்சலி!
Kalaignar Remembrance Day DMK members pay tribute in Periyakulam
தமிழ்நாடுமுன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு பெரியகுளத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணா சிலை முன்பாக முன்னாள் தமிழ்நாட்டு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு பெரியகுளம் திமுக நகர் கழக செயலாளர் கே முகமது இலியாஸ் அவர்களது தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அவர்களுடன் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் பெரியகுளம் திமுக நகர் கழக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அஞ்சலி கோஷங்கள் எழுப்பினார்கள், பின்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கலைஞர் அவர்களது திருவுருவ படத்திற்கு மாவட்ட அவைத்தலைவர், பி.டி.செல்லப்பாண்டியன்.நகர் கழக செயலாளர் கே.முகமது இலியாஸ் முன்னிலையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் , பெரியகுளம் நகர் கழக அவை தலைவர் வெங்கடாசலம் . நகர் கழக துணைச் செயலாளர்கள் மு .சேதுராமன் . ஏ .பி சரவணன் . மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பா. கார்த்திக் , மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார் ராஜபாண்டியன் ,நகர சுற்றுச்சூழல் மேம்பாட்டு அணி அமைப்பாளர் பழனிக்குமார் துணை அமைப்பாளர் சரவணகுமார் , மற்றும் பெரியகுளம் வார்டு திமுக செயலாளர்கள், நகர் கழக சார்பு அணிஅமைப்பாளர்கள் துணைஅமைப்பாளர்கள் . தென்கரை பேரூராட்சி தாமரைகுளம் பேரூராட்சி கள்ளிப்பட்டி ஆகிய பகுதியிலிருந்தும் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு புகழஞ்சலி கோஷங்கள் எழுப்பினார்கள்.
English Summary
Kalaignar Remembrance Day DMK members pay tribute in Periyakulam